Friday, June 17, 2005

இலக்கணம் பிழைக்குதடி தலைக்கனம் குறையுதடி

நேற்று வருவதாக நாளைக்குச் சொல்கின்றாயே.

ஏன் வருவாள் என்றுவிட்டு வராமல் இருப்பாய்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, June 16, 2005

அக்கா சொன்ன நான்கு வரிக்கதை

ஆடு ஒன்றின் காலிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதற்குப் பக்கதிலிருந்து ஒருவன் அழுது கொண்டிருந்தான்.

அந்த வழியால் வந்த அவனது நண்பன், "இது உன்னுடைய ஆடு அல்லவா. என்ன நடந்தது. யார் அதன் காலை முறித்தார்?" என்று கேட்டான்

அதற்கு அந்த ஒருவன் சொன்னான்:
"விருந்தினர்கள் வருகின்றார்கள் இன்று. அவர்களுக்கு ஆட்டுக்கறி என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அன்பாக நான் வளர்த்த ஆடு இது. ஒரேயடியாய் எப்படி நான் அதைக் கொல்வேன்.. அதுதான் கொஞ்சங் கொஞ்சமாய்க் கொல்லுறன்".

....
இக்கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் நீதி? அதை உங்களிடம் விட்டுவிடுகின்றேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, June 15, 2005

தமிழாக்களின்ரை முகத்திலை எண்ணை வழியுமாம்

தமிழர்களை எப்படி அடையாளங் காண்பது என்ற பேச்சு வந்தபோது தொடர்புசாதனத்தைச் சேர்ந்த ஒருவர் சொன்னர்:
"முகத்திலை எண்ணை வழியும்; லிப்டில் போனால் கத்தரிக்காயும் மீன் பொரியலும் மணக்கும்".

அவர் சொல்லக்கூடும் தான் நகைச்சுவையாகத்தான் சொன்னதாக.
......

கனடாவில் ஒரு தமிழ் வகுப்பு. வாத்தியார் சொன்னார் பொதுவா திராவிடர்கள் கறுப்பென்று. எல்லா மாணவர்களும் ஆளையாள் பார்த்தார்கள்.

நன்றி கரவெட்டியின் சுட்டெரிக்கும் வெய்யிலே...ஆம் நான் மட்டுமே பொதுவா திராவிடன்.

(ஆச்சரியப்பட வேணாம். அதொரு சின்ன வகுப்பு).

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பாட்டியொருத்தி பேரனில் கோபங் கொண்டாள்

நான் சுட்ட வடையை சுட்ட காக்காவே,

கொஞ்சம் பொறு இங்கு கனடாவில் என் பேரன் உள்ளான்.

நாளை வந்து உனை சுடுவான்.

அதுக்கே இப்ப தன் சோதரங்களை சுட்டு பயிற்சி எடுக்கிறான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, June 12, 2005

நன்றி வாங்கலையோ நன்றி வாங்கலையோ

இந்த மேடை நிகழ்வுகளுக்குப் போனால் எனக்குப் பிடிக்காத விடயங்கள் மூன்று இருக்கின்றன.

1) பிரதம விருந்தினர் உரை
2) விசர் வரச் செய்யும் ஒலியமைப்பு
3) நன்றியுரை

அதற்குரிய காரணங்களை உங்களுக்கு நான் சொன்னால் பிறகு அந்த உரைகளுக்கும், எனது இந்த 'நன்றியுரைக்கும்' வித்தியாசம் இல்லாமற் போய்விடும்.

மறக்க முதல் ஒண்டைச் சொல்ல வேணும். 'முதலிரவு' என்ற பதிவை நானிட்ட நாளில் எனது வலைப்பதிவிற்கு வருவோரின் எண்ணிக்கை 25% ஆல் கூடியது. இது தற்செயலான நிகழ்வென்று எண்ணத்தான் விரும்புகின்றது மனசு.

இந்த நட்சத்திர வாரத்திலையிருந்து நான் சில படிப்பினைகளைப் பெற்றிருக்கிறன். அதனைச் சொல்லி உங்கள் (மற்றும் என்) மனசினை நோகடிக்க எனக்கு விருப்பமில்லை.

இன்னும் நிறைய எழுதியிருக்கலாமோ என்று இப்ப சத்தியமா நான் வருந்தேல்லை எண்டதையும் நான் வருத்தத்தோடு பகிர்ந்து கொள்ளுறன்.

பின்னூட்டமிட்ட, வாக்கிட்ட, எனது பதிவினை வாசித்த யாவருக்கும் நன்றி.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

பிரிவே என்னைப் பிரிந்து போ

'ஒண்டின்ரை அருமை அது இருக்கேக்கை தெரியாது; பிரிந்து போன பின்புதான் தெரியும்' என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் பிரிந்து போகச் செய்யும் அதிசயமான இரண்டுகால் பிராணிகள் நாங்கள்.

'இருக்கேக்கையே அருமை தெரியேல்லையாம்; பிரிந்து போன பின்பா தெரியப் போகின்றது' என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

சொந்தங்களையும், பிராணிகளையும், பொருட்களையும் பிரிவதைத்தான் பிரிவென்று யாவரும் சொல்கின்றார்கள்.

எனது அடையாளங்களை நானே இழந்துபோவது பிரிவில்லையா?

என்னை நானே பிரிவது பிரிவில்லையா?

எனது சின்னஞ்சிறு பிராயத்தை விலகி மூப்படைந்து செல்வது பிரிவில்லையா?

பரிவுக்குரிய ஒன்றை விலகிச் செல்வது கட்டாயம் பிரிவாகத்தான் இருக்க முடியும். சின்னஞ்சிறு பிராயத்தை நினைச்சுப் பார்க்கவே என் சந்தோச வானத்தில் பட்டம் பறக்கிறது.

பள்ளிகூடத்துக்கு கள்ளம் போட்டுவிட்டு, அம்மா ஏசப் போகின்றாவே என்ற பயத்தில் அம்மாவுடன் சேர்ந்து சட்டி பானை கழுவி, வீடெல்லாம் துப்பரவு செய்து, அம்மாவுக்கு ஐஸ் வைத்தது ஏன் இப்போ கரைந்து போயிற்று?

சீனிப் போத்தலைத் திறக்க முடியாமல் அதனை உடைச்சு சீனி தின்ற அந்த இனிப்பான பொழுதுகள் ஏன் உடைந்து போயின?

அக்காளுடன் அடிபட்டு அடிப்பாளே என்ற பயத்தில் வேப்பமரத்தில் நாள் முழுக்க ஏறியிருந்த பொழுது ஏன் இறங்கிப் போயிற்று?

அழகமக்காத்தை வீட்டுக் காணியிலை சும்மா விழுந்து கிடந்த ஒற்றை மாங்காயை எடுத்துக் கொண்டு ஓடிவர, அது களவு என்று கடிந்த அக்கா இன்று கனடாவில் சொல்கின்றாள், "தம்பி, உனக்கொன்றும் தெரியாதடா. பிடிபட்டால்தான் களவு; மற்றபடி களவில்லை". அக்காவை மாற்றியது எது? காலமா? குளிரா? பணமா? மற்ற மனங்களா?

பிரிந்து போன சின்னஞ்சிறு பிராயமே, நீ திரும்ப வாராயோ?

சின்னனிலை மனசிலை கள்ளமில்லை; வஞ்சமில்லை. பிள்ளையார் எண்டு சொன்னாலே மூன்றுமுறை தோப்புக்கரணம் போடுவம். இன்று...? இன்று பிள்ளையார் பால் குடிக்கின்றார் என்று பகிடிவதை செய்கின்றோம்.

வஞ்சனை. மனசுபூராவும் வஞ்சனை இன்று. பொய், களவு, ஏமாற்று, காட்டிக் கொடுத்தல், முன்னே நின்று அனுதாப மொழிபேசிப் பின்னே அவன் அப்படியாம் இவள் இப்படியாம் என்று புறம் பேசுகின்றோம்.

இது சந்தோசமா? மற்றவரின் துன்பத்தில், இழப்பில், குறைபாடுகளில் சிரிப்பது ஆனந்தமா? ச்சை...என்ன மனிதர்கள் நாங்கள். புண்ணைச் சொறிவதில் எவ்வளவு பேரின்பம் எமக்கு.

கெட்ட எண்ணங்களே, வஞ்சகப் பொழுதுகளே, தீய கனவுகளே யாவும் என்னைவிட்டுப் போங்கள். கெட்டவை விலகுவது பிரிவில்லைத்தானே.

பிரிந்த உறவுகளே! இன்னும் 10, 20 அல்லது முப்பது ஆண்டுகளின் பின் நாம் சந்திக்கலாம்; சந்திக்காதும் போகலாம். ஒருவேளை சந்திச்சாலுங்கூட அடையாளம் மாறி அடையாளங் காண மாட்டோம். இவரை முந்தி எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யாரைப் பார்த்தாலும் தோன்றுவது போல யாரோ ஒரு நபர் என்றி விலகிச் செல்வோமோ யாரறிவார்.

சேர்ந்து பிரிவதும்
சேராமே பிரிவதும்
பிரியாமலே பிரிவதும்

எங்கே, எப்போ, யாருக்கு, எவருடன், ஏன் நடக்கும் என்று தெரியாத காரணத்தால்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
statistics