Monday, June 20, 2005

அந்நியன் ஆனேனே

இரண்டு கல்யாணங்களுக்குப் போய் நன்றாய் உண்டுங் கண்டும் வீடு திரும்பும் போது அந்நியன் படம் பார்க்க நண்பர்கள் திட்டமிட்டார்கள்.

எனக்கு ஒரே அசதியாய் இருந்தது. படம் பார்க்கவே அன்று விருப்பம் இருக்கவில்லை. அதனைவிட நானொரு கஞ்சன். அநியாயமாய் ஒரு படத்திற்கு 15$ செலவழிக்க நானொருபோதும் விரும்பேன்.

10$ தான் இம்முறை என்று நண்பன் சொன்னபோது மறுப்பேதும் சொல்லமுடியவில்லை.

ஒரு திரையரங்கிற்குப் போனால் அங்கு house fullஆம். சரியென்றுவிட்டு இன்னொரு திரையரங்கிற்கு பெருந்தெரு ஊடாகப் பயணஞ் செய்து போயாகிவிட்டது.

அங்கு இருக்கைகளுக்கு இலக்கம் இல்லை. யாரும் எங்கும் இருக்கலாம். வெளியில் பார்வையாளார்களை வரிசையாக நிற்க வைக்கக்கூட அந்தப் புண்ணியவான்கள் முயற்சி செய்யவில்லை.

ஒருவாறு முண்டியடித்துப் படம் பார்க்க இருந்தாயிற்று.

அந்தத் திரையரங்கின் ஒலியமைப்பு சரியான கேவலம். ஒலியினளவைக் கூட்டி விட்டிருந்தார்கள். நானொன்றும் பாதி செவிடில்லை என்று சொல்லி திரையரங்கின் உரிமையாளரின் பிடரியில் ஒரு சாத்து சாத்த முடியாதா என்று மனசு வன்முறையாய்ச் சிந்திச்சது.

ச்சை...அஞ்சு சதத்துக்கு உதவாத ஒரு திரைப்படத்திற்காக நானேன் வன்முறையாய்ச் சிந்திப்பான். என்னிலேயே எனக்கு வெட்கம் எழுந்தது. பக்கத்தில் இருக்கும் தோழன் சொன்னான் "perfect volume" என்று. ஒருவேளை என்னில்தான் பிழையோ?

எப்படா படம் முடியும் என்றிருந்தது. ஒரு கட்டத்தில் வெளியே போய் நண்பர்கள் படம் பார்த்து முடியும் வரை காத்திருக்கலாமோ என்றும் யோசித்தேன். அவர்களது இன்பத்தை நான் ஏன் குலைப்பான் என்றுவிட்டு அமைதியாய் படம் பார்த்தேன்.

படம் முடிந்து வெளியே வரும்போது முடிவு செய்தேன். இனி திரையரங்கிற்குச் சென்று தமிழ்ப்படம் பார்க்ககூடாது.

அதனைவிட முக்கியமாய் என்னுள் ஒரு கேள்வியெழுந்தது. ஏன் என்னால் என் நண்பர்களைப்போலிருக்க முடியவில்லை? நான் ஏன் அந்நியனானேன்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

12 Comments:

At 7:00 PM, June 20, 2005, Blogger சினேகிதி said...

ஏன்னா மாமாச்சிக்குத் தெரியும் படம் பார்க்க $15 குடுக்காம கொஞ்சம் பொறுமையா இருந்து $1 க்கு படத்தை வாடகைக்கு எடுத்துப் பார்த்தால் மிச்சமம் $14 ஊருக்கு அனுப்பலாம்(மருமகள் சந்தியாவுக்குத்தான்) நான் சொல்றது சரியா?

 
At 8:52 PM, June 20, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

15 டொலர் கொடுக்காமல் இருந்து நான் ஒரு டொலர் போக மீதி 14 டொலரினை ஊருக்கு ஏன் அனுப்புவதில்லை என்பது ஏனென்றும் தெரியவில்லை.

நன்றி ஸ்நேகிதி.

 
At 11:53 AM, June 21, 2005, Anonymous Anonymous said...

நிங்கள் ஏன் அன்னியன் ஆநிர்கள் என்பதர்க்கு காரணம், நிங்கள் அஞ்ஞாத வாசம் லண்டனில் தனிமையில் இருபதனால்தான். நெரத்துக்கு ஒரு கல்யாணம் பான்நினா அப்படி இருக்காது...

 
At 12:09 PM, June 21, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

மூஞ்சூறு தானே தனிய போக இடமில்லையாம் , விளக்குமாற்றையும் காவிக்கொண்டு போச்சுதாம்.

 
At 3:02 PM, June 21, 2005, Anonymous Anonymous said...

Maybe, அந்த விளக்குமாறு புது வளி காட்டளாம் அல்லவா? don't be -'ve be +'ve.

 
At 3:20 PM, June 21, 2005, Blogger இளங்கோ-டிசே said...

//ஏன் என்னால் என் நண்பர்களைப்போலிருக்க முடியவில்லை? நான் ஏன் அந்நியனானேன்? //
கிஸோ, உதுக்குத்தான் சொல்வது, தியேட்டருக்குள்ள இருக்கேக்கை, fiance பற்றி யோசிக்ககூடாது என்று. அவாவை வீட்டை விட்டிட்டு நான் மட்டும் படம் பார்க்க தனிய வந்திட்டன், நாளைக்கு காணும்போது அவா செருப்பாலையோ அல்லது தும்புக்கட்டையாலோ எதாலை அடிக்கப்போறா என்டு யோசித்துக்கொண்டிருந்தால், 'அந்நியனாய்' ஆகாமல் வேறு என்னவாக ஆவதாம் :-) ?

 
At 2:54 PM, June 22, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

புதுவழியா பார்க்கலாம். +ve ஆகவே இருக்க முயற்சிக்கின்றேன். ஆனால் யதார்த்தம் என்றும் ஒன்று உள்ளதல்லவா?

நானேன் ஆரின்ரையும் fianceஐ நினைக்கப் போறன்.

நான் கொஞ்சம் சீரியஸ் ஆக எழுதலாம் என்று முயற்சித்தால் அதுவும் இப்படியாப் போச்சே.

 
At 6:17 PM, June 22, 2005, Blogger Thangamani said...

//நான் கொஞ்சம் சீரியஸ் ஆக எழுதலாம் என்று முயற்சித்தால் அதுவும் இப்படியாப் போச்சே.///

:))

 
At 6:35 PM, June 22, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

"...இப்படியாப் போச்சே" என்று நான் புலம்பியதும் தங்கமணிக்குப் பகிடியாகப் போச்சே. :-)

 
At 7:08 PM, June 22, 2005, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல எழுதியிருக்கிறீங்க கிஸோ.

முந்த நாள் இங்க அன்னியன் பாத்திட்டு வந்த பிள்ளையின்ற Split personality கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லேலாம முழிச்சன்.

கொலையெல்லாம் செய்வினமா? செஞ்சிட்டு ஒண்டுமே நடக்காதமாதிரித் திரிவினமா எண்டெல்லாம் கேள்விகள் போச்சு

-மதி

 
At 7:15 PM, June 22, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

வாங்கோ மதி. கன நாளா இந்தப் பக்கம் காணேல்லை எண்டு இப்பதான் நினைக்காமல் இருந்தன். :-)

அவை அந்த disorderஐ கொன்ற விதம் சும்மா இல்லை. படத்தைப் பற்றி நான் சொல்ல விரும்பேல்லை... அதுக்குத்தானே நிறையப்பேர் இருக்கினம்.

 
At 4:51 PM, July 30, 2005, Blogger நற்கீரன் said...

நேற்றுத்தான் பார்த்தேன்.
படம் ஒரு பிதற்றல்.
அரைவாசி படம் ff பார்த்து முடித்தது.

 

Post a Comment

<< Home

statistics