Thursday, June 16, 2005

அக்கா சொன்ன நான்கு வரிக்கதை

ஆடு ஒன்றின் காலிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதற்குப் பக்கதிலிருந்து ஒருவன் அழுது கொண்டிருந்தான்.

அந்த வழியால் வந்த அவனது நண்பன், "இது உன்னுடைய ஆடு அல்லவா. என்ன நடந்தது. யார் அதன் காலை முறித்தார்?" என்று கேட்டான்

அதற்கு அந்த ஒருவன் சொன்னான்:
"விருந்தினர்கள் வருகின்றார்கள் இன்று. அவர்களுக்கு ஆட்டுக்கறி என்றால் ரொம்பப் பிடிக்குமாம். அன்பாக நான் வளர்த்த ஆடு இது. ஒரேயடியாய் எப்படி நான் அதைக் கொல்வேன்.. அதுதான் கொஞ்சங் கொஞ்சமாய்க் கொல்லுறன்".

....
இக்கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் நீதி? அதை உங்களிடம் விட்டுவிடுகின்றேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At 3:21 PM, June 24, 2005, Blogger கயல்விழி said...

நல்ல கருப்பொருள். நம்மூரிலை எல்லாம் வளர்த்த ஆடு கோழிகளை சமைக்க மாட்டாங்கள். கஸ்டமான விடயம் .

 
At 6:16 PM, June 24, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

ஆட்டை வேறெதுக்கு வளர்ப்பார்கள்? இறைச்சிக்குத்தானே.

 
At 1:49 AM, June 25, 2005, Blogger இளைஞன் said...

அக்கா சொன்ன நாலு வரிக் கவிதை எண்டீர்? எங்க கவிதை?

வந்து வாசிச்சு பாத்தா ஆடு காலு எண்டு எழுதி வச்சிருக்கிறீர்!

என்ன விளையாடுறீரா? எனக்கு இப்ப அக்கா சொன்ன நாலு வரிக்கவிதை வேணும். :(

 
At 7:09 AM, June 25, 2005, Anonymous Anonymous said...

இளைஞன்!
உமக்கு விளங்கேலயோ?
நாலு காலையும் தான் கவிதையின்ர நாலு வரி எண்டு சொல்லப்பட்டிருக்கு.
'உன் கண்கள் இரு கவிதை' என்பதுபோல
இங்கே கால்கள் கவிதை.
கிசோ!
'அருமயான கவித'.

 
At 9:52 AM, June 25, 2005, Blogger சினேகிதி said...

கிஸோண்ணா சொன்னது கதையாக்கும்.

 
At 2:54 PM, June 25, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

இளைஞன், நான்கு வரிக்கதை என்றுதான் குறிப்பிட்டிருந்தேன். சாட்சிகள் தேவையா? :)

அக்காவுக்கு நிலா நிலா ஓடி வா என்ற கவிதையும், கொஞ்ச தேவாரமும்தான் தெரியும்(சினிமாப் பாடல்களையும் சேர்க்கலாமோ?).

வசந்தன், அருமையான கவிதா எண்டு சொல்ல வந்தீங்களோ?

//கிஸோண்ணா சொன்னது கதையாக்கும்.//
சினேகிதிக்கு நன்றியாக்கும்.

 

Post a Comment

<< Home

statistics