நன்றி வாங்கலையோ நன்றி வாங்கலையோ
இந்த மேடை நிகழ்வுகளுக்குப் போனால் எனக்குப் பிடிக்காத விடயங்கள் மூன்று இருக்கின்றன.
1) பிரதம விருந்தினர் உரை
2) விசர் வரச் செய்யும் ஒலியமைப்பு
3) நன்றியுரை
அதற்குரிய காரணங்களை உங்களுக்கு நான் சொன்னால் பிறகு அந்த உரைகளுக்கும், எனது இந்த 'நன்றியுரைக்கும்' வித்தியாசம் இல்லாமற் போய்விடும்.
மறக்க முதல் ஒண்டைச் சொல்ல வேணும். 'முதலிரவு' என்ற பதிவை நானிட்ட நாளில் எனது வலைப்பதிவிற்கு வருவோரின் எண்ணிக்கை 25% ஆல் கூடியது. இது தற்செயலான நிகழ்வென்று எண்ணத்தான் விரும்புகின்றது மனசு.
இந்த நட்சத்திர வாரத்திலையிருந்து நான் சில படிப்பினைகளைப் பெற்றிருக்கிறன். அதனைச் சொல்லி உங்கள் (மற்றும் என்) மனசினை நோகடிக்க எனக்கு விருப்பமில்லை.
இன்னும் நிறைய எழுதியிருக்கலாமோ என்று இப்ப சத்தியமா நான் வருந்தேல்லை எண்டதையும் நான் வருத்தத்தோடு பகிர்ந்து கொள்ளுறன்.
பின்னூட்டமிட்ட, வாக்கிட்ட, எனது பதிவினை வாசித்த யாவருக்கும் நன்றி.
11 Comments:
உங்களுடைய எல்லா பதிவுகளையும் படித்தேன். குறிப்பாக வீடு பற்றிய பதிவு மனத்தை நெகிழ செய்தது. எனக்கும் வீடுகளில் பல அனுபவம் உண்டு. வீடென்று எதனை சொல்வீர் இது இல்லை எனது வீடு என்ற கவிதையை படித்திருக்கிறீர்களா?
நன்றிகள்.
பின்னூட்டங்களப் பற்றிக் கவலைப்படாமல் எழுதும். ஆனா நான் உம்மட்ட எதிர்பாத்தது அதிகம் எண்டதயும் வருத்தத்தோட சொல்லிக்கொள்ளுறன்.
உங்களின் இந்த வாரப் பதிவுகள் அனைத்தையும் படிக்க முடியவில்லை என்றாலும், படித்தவற்றுள் சில மிகவும் பிடித்திருந்தன. 'பிரிவு' பற்றி எழுதி இருந்தது நன்றாக இருந்தது. முதிர்வான எண்ணங்கள்.
தொடர்ந்து ஊக்கத்துடன் எழுதுங்கள்.
This comment has been removed by a blog administrator.
எதிர் பார்புக்கள் கூடும்போது,
disappointment தான் மிஞ்சி இருக்கும்...
ஆதனாழ், ஏதிர்பார்புக்களை விட்டு விட்டு, உங்களது பனி தொடர எனது வாழ்த்துக்கள்...
சிறந்த கலைஞ்ஞனுக்கு ஒரு audience போதும்மாம்,
காவலன்
இல்லை தேன் துளி. எங்குள்ளது அக்கவிதை? வசந்தன், ;-( . நன்றி செல்வராஜ். அடடா, தொட்டுட்டீங்க காவலன்.
அப்பாடா ஒரு மாதிரி உங்கட தொல்லை வாரம் முடிஞ்சுது. நன்றி கடவுளே
சின்னப் பையன் என்று நினைத்தேன். படு வேகமாக இருக்கின்றீர்களே. உங்கள் நட்சத்திர வார பதிவுகள் யாவும் நன்றே இருந்தன. வாழ்த்துக்கள் கிஸோ!
\\ நன்றி கடவுளே//
you are welcome கறுப்பி.
சிந்து நீங்கள் பிந்தி சிந்திய பின்னூட்டத்திற்கு நன்றி. வேகமா இருக்கிறேனா? பொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.
//படு வேகமாக இருக்கின்றீர்களே.//
கிஸோ, நீர் நேற்று நடந்த walk-a-thonனில் வேகமாய் நடந்துபோனதைத் தான் சிந்து குறிப்பிடுகின்றாரோ தெரியாது. எதற்கும் முதலில் அதை உறுதிபடுத்தும். நானும் வசந்தன் குறிப்பிட்டமாதிரி இன்னும் அதிக பதிவுகளை உங்களது நட்சத்திர வாரத்தில் எதிர்பார்த்தேன் :-(.
வாறேன்.
நாங்கள் எலோருமே வேகமா நடந்ததாக ஒருங்கமைப்பாளார் இறுதியில் குறிப்பிட்டார். முன்னால் போன நண்பரின் கையைப் பிடிச்சுக் கொண்டு, "குழந்தை ஒன்று தனது தந்தையைத் தேடுகின்றது" என்று நக்கலடித்தது தவிர வேறொன்றும் சுவாரசியமாய் இல்லை.
அடுத்த தடவை நிறையப் பதியுறன் என்று உறுதியெடுத்துக் கொள்ளுறன்.
Post a Comment
<< Home