Wednesday, June 15, 2005

தமிழாக்களின்ரை முகத்திலை எண்ணை வழியுமாம்

தமிழர்களை எப்படி அடையாளங் காண்பது என்ற பேச்சு வந்தபோது தொடர்புசாதனத்தைச் சேர்ந்த ஒருவர் சொன்னர்:
"முகத்திலை எண்ணை வழியும்; லிப்டில் போனால் கத்தரிக்காயும் மீன் பொரியலும் மணக்கும்".

அவர் சொல்லக்கூடும் தான் நகைச்சுவையாகத்தான் சொன்னதாக.
......

கனடாவில் ஒரு தமிழ் வகுப்பு. வாத்தியார் சொன்னார் பொதுவா திராவிடர்கள் கறுப்பென்று. எல்லா மாணவர்களும் ஆளையாள் பார்த்தார்கள்.

நன்றி கரவெட்டியின் சுட்டெரிக்கும் வெய்யிலே...ஆம் நான் மட்டுமே பொதுவா திராவிடன்.

(ஆச்சரியப்பட வேணாம். அதொரு சின்ன வகுப்பு).

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

At 3:51 PM, June 15, 2005, Blogger டிசே தமிழன் said...

நல்லாய்தான் இருக்கின்றது. என்றாலும் உமது பதிவுகள் வரவர ஜென் கதைகள் அளவில் சிறுசு சிறுசாகிக் கொண்டிருக்கின்றது. தொலைத்தூரப் பிரிவுத்துயரில் மூழ்கிக்கிடக்கின்றீர் போலத் தெரிகிறது.அதுதான் அடிக்கடி ரொரன்ரோ வாரும் என்டு சொல்கிறனான் :-).

 
At 3:56 PM, June 15, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

ஜென் கதையல்ல, என் கதை. :-)

தூரங்கூடக் கூட ஈர்ப்புவிசை குறையும் என்பது சடங்களுக்கு மாத்திரம்தான். உறவுகளுக்கு இல்லை.

கவித கவிதை.

 
At 4:30 PM, June 15, 2005, Blogger நற்கீரன் said...

This comment has been removed by a blog administrator.

 
At 4:33 PM, June 15, 2005, Blogger கறுப்பி said...

உண்மைதான் கிஸோ இங்கு தொடர்பு சாதனத்தில் வேலை செய்பவர்களின் முகத்தில் எண்ணெய் வழிவதைக் கண்டிருக்கின்றேன்.

 
At 4:42 PM, June 15, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

கறுப்பி வாங்கோ. அமெரிக்கா எங்கள் மீதும் படையெடுக்கப் போகுது. சும்மா இருங்கோ.

நாங்களும் அதே பிழையை விடுறம் என்று என் சிற்றறிவு சொல்லுது.

 
At 6:02 PM, June 15, 2005, Blogger துளசி கோபால் said...

ஏம்ப்பா,
பல வெள்ளைக்காரங்ககிட்டே 'ஒரு மாதிரி மிருகக் கொழுப்பு' குறிப்பா
ச்சின்னப்பசங்க கிட்டே 'சாஸேஜ்' நாற்றம் அடிக்குதே அதை எங்கெ போய் சொல்ல?

 
At 6:15 PM, June 15, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

துளசி, அப்படி மணப்பதில் தவறில்லை. ஆனா அதை ஒரு இழவு போலச் சொல்லுதல்தான் தவறு. என்னில் கத்தரிக்காய் மணக்கும் நான் வெளியே மதியம் போகையில். என் நண்பன் சொல்லிச் சொல்லிக் கடிப்பான். ஆனா அதையே ஒருவர் கத்தரிக்காய் மணந்தால் அவர் தமிழர் என்று முழு இனத்துக்கே அந்த அடையாளத்தை சூட்டிப் பார்ப்பதுதான் என்னைப் பொறுத்தவரையில் கண்டனத்துக்குரியது.

அந்த தொடர்புசாதன நபர் வெள்ளையினத்கவரில்லை; நம்மவர்தான். நான் தான் தெளிவாச் சொல்லவில்லை என்று நினைக்கிறன்.

 
At 7:46 PM, June 15, 2005, Blogger Shakthi said...

கிஸோ, உங்கள் பதிவுகள் யாவும் பெரியதாகவே இருக்கின்றன..... வாழ்த்துக்கள்.. இப்ப எல்லாம் உங்கள் தழிழை மாற்றிக்கொண்டு போகின்றீர்கள் போல தோன்றுகின்றது. இல்லை அப்படித்தான் நீங்கள் பேசுவதுண்டா. உ+ம்: ஒண்டின்ரை, இருக்கேக்கையே, இருக்கினம்
இல்லவிடின், நீங்கள் காமடி மன்னன் என்று Proof பண்ணிறீர்களா

 
At 11:59 AM, June 16, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

டீசே சிறிதென்றார்; நீங்கள் பெரிதென்கிறீர்கள். ஒரே குழப்பமா இருக்கு. நான் வழமையாவே அப்படித்தானே எழுதுறனான். மன்னன்? நான் சாதாரண குடிமகனாகவே இருந்துவிட்டுப் போகின்றேன்.

 

Post a Comment

<< Home

statistics