Tuesday, June 07, 2005

நாய் கடிக்கும் கவனம்

நாய் ஒரு அமைதியான மிருகம். எந்தவீட்டு நாய் என்று தயவு செய்து கேட்க வேண்டாம்.

நாய் வள் வள் என்று சத்தமிடும்; நேரங்கெட்ட நேரத்திலை ஊளையிடும். என்ன காரணம் என்று அதற்கு மட்டுமே புரியும்.

செல்வரூபன் ரதியக்காவுக்கு ஏதோ கடிதங் கொடுக்க அவா அவரை "நாயே, நீ உதுக்கெல்லாம் நீ ஒருகாலம் அனுபவிப்பாய்" என்று திட்டிச் சாபமிட்டார். அதே ரதியக்காவை அதே செல்வரூபன் கல்யாணங் கட்டி இப்ப நல்லா கஸ்ரப்படுகிறார்.

குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது. ஆனால், செல்லமக்காவீட்டு நாய் மட்டும் விதிவிலக்கு. என் காலே இதற்குச் சாட்சி.

நாய் ஒரு நன்றியுள்ள மிருகம். ஆனால், செல்லமக்காவீட்டு நாய் மட்டும் விதிவிலக்கு.

நாய் வித்த காசு குலைக்காது.

குழந்தைப் பிள்ளைக்கும் குட்டிநாய்க்கும் செல்லங் கொடுக்கக் கூடாதென்று சில சொறி நாய்கள் வவ்வும்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

At 10:49 AM, June 08, 2005, Blogger Thangamani said...

//செல்வரூபன் ரதியக்காவுக்கு ஏதோ கடிதங் கொடுக்க அவா அவரை "நாயே, நீ உதுக்கெல்லாம் நீ ஒருகாலம் அனுபவிப்பாய்" என்று திட்டிச் சாபமிட்டார். அதே ரதியக்காவை அதே செல்வரூபன் கல்யாணங் கட்டி இப்ப நல்லா கஸ்ரப்படுகிறார்.///


இதுதான் நகைச்சுவை!!

 
At 11:58 AM, June 08, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

செல்வரூபன்ரை நிலையிலை இருந்தும் கொஞ்சம் பாருங்கோவன் தங்கமணி.

 
At 2:15 PM, June 08, 2005, Blogger கறுப்பி said...

he he he (*_*)

 
At 2:21 PM, June 08, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

செல்வரூபன்ரை நிலையிலையிருந்து என்றுதான் தங்கமணிக்குச் சொன்னனான்; ரதியின் நிலையென்று சொல்லவில்லையே. அவசரப்பட்டுவிட்டாயே கறுப்பி.

 
At 2:25 PM, June 08, 2005, Blogger முகமூடி said...

// நாயே, நீ உதுக்கெல்லாம் நீ ஒருகாலம் அனுபவிப்பாய் //
// அதே ரதியக்காவை அதே செல்வரூபன் கல்யாணங் கட்டி //
சாபம் பலிச்சுட்டது போலிருக்கு...

(ஆமாம் செல்வரூபன், ரதியக்கா எல்லாம் உண்மை கதாபாத்திரங்களா... நான் ப்ளாக் உலகுக்க்கு புதிசு)

 
At 2:37 PM, June 08, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

வாங்கோ முகமூடி. வலைப்பதிவுலகு உங்களை வருக வருக என்று வரவேற்கிறது. நீங்களும் நாய் பற்றி (இருவரில் யாரடி நாய்) எழுதியிருக்கிறீர்கள்.

உண்மைக் கதாபாத்திரமோ இல்லையோ என்று சொன்னால் அதில் த்ரில்(?) இல்லாமல் போய்விடுமே. இதுக்குமேலையும் தெரிய வேணுமெண்டால் செல்வரூபனைக் கேட்டுப் போட்டுச் சொல்லுறனே. :-)

 

Post a Comment

<< Home

statistics