போரின்றிப் போனால்...?
ஈழவிடுதலைப் போராட்டம் மலர்ந்திருக்காவிடின், சிறிலங்காவின் கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்கள் மாற்றி எழுதப்பட்டிருக்கும். சிறீலங்காவின் வடக்குக் கிழக்குப் பகுதியில் "தெமிலர்" என்ற காட்டுவாசிகள் இருந்தார்கள்; அவர்கள் மனிதர்களைப் பிடித்துத் தின்பவர்கள். அந்த இடத்தை முதலாம் பராக்கிரமபாகு தனது ஏழாவது சின்னவீட்டின் நான்காவது பிள்ளைக்கு பரிசாக வழங்கினான் என்றவாறெல்லாம் பாடப் புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கும்.
மளமளவென்று வடபகுதியெல்லாம் பௌத்த விகாரைகள் கட்டுவார்கள். பின்னர், அதனை இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னன் ஒருவன் கட்டியதாகப் பூச்சுற்றியிருப்பார்கள். கந்தரோடை ஒன்றே அதற்குச் சாட்சி.
மேலும்...
பிறகென்ன, உலகமும் ஆகா...ஓகோ என்று தாளம் போட்டிருக்கும்.
நல்ல காலம் அப்படியெல்லாம் நடக்கவில்லை. போர் இல்லாதிருந்தால் பாவம் மனிதநேயம் பற்றிக் கதைப்பவர்கள்...அவர்களுக்கு ஒரு பேசுபொருளும் இல்லாமல் போயிருக்கும்.
6 Comments:
நன்றாய்ச் சொன்னீர்கள் கிசோ! நம் தமிழ் அடையாளத்தை நாம் இழந்திருப்போம்.
அந்த பேசுபொருள் (மனித நேயம்) இல்லாமற் போயிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். பொருளாதரத்தில் மெலிந்தோர் (அனேகமாக சாதியால்) தழ்த்தப்பட்டவரின் பிள்ளைகள் போருக்குச் சென்று உயிரைவிடவும், போருளாதரதால் மேம்பட்ட (அனேகமாக மேல் சாதியினர்) இன்று வெளி நாடுகளில் இருந்து கொண்டு 'மாவீரத்தைப்' பற்றி கவிதை எழுதும் அவலனிலை வந்திருக்காது. வடக்கிலிருந்த அப்பாவி முஸ்லீம் மக்கள் 500 ரூபாய்களுடன் சொச்ச உடமைகளுடன் ஒரு நாளில் நாடுகடத்த்தப்படும் நிலை வந்திருக்காது.... மனிதம் வென்றிருந்தால் மனித நேயமும் பேசுபொருளாயிராது. தன்னிருப்பைத் தக்கவைத்துகொண்டு 'கவிதை' பாடுவருக்கு 'மாவீரமும்' பெசுபொருளாயிராது.
- நித்திரையெழுப்பி.
உண்மைதான். தமிழர்களே இருந்திருக்க மாட்டார்கள் எனும்போது மேல்சாதித் தமிழன், கீழ்ச்சாதி தமிழன் என்ற பிரிவுகள் இருந்திருக்காது. புத்தம் சரணம் கச்சாமி பாடிக்கொண்டு எல்லோரும் "சமமாய்" இருந்திருக்கலாம். இப்போது ஓமந்தையிலும் வவுனியாவிலும் திருமலையிலும் முளைத்த புத்தர் மாதிரி, பிள்ளையாரும் முருகனும் இடைக்கிடை யாராது தீவிரவாதிகளால் முளைத்திருப்பார், பின் அடித்து நொருக்கப்பட்டிருப்பார். நித்திரையெழுப்பவும் ஆளிருந்திருக்காது.
முஸ்லீம் மக்கள் நாடு கடத்தபட்டது ஒரு கண்டிக்கப்பட்ட விடயம், தமிழர்கள் நங்கள் மன்டி இட்டு மன்னிப்பு கேட்க்கிறோம்...
எத்தனை நாட்களுக்கு திரும்ப திரும்ப இதை கிளறுவீர்கள்...
Lets move on...
ராம்,
நாளை இங்கை அரசும் சிங்களத் தீவரவாதிகளும் தமிழர்மீது கட்டவிழ்த்தப் பட்ட கொடூரங்கள் அனைத்துக்கும் மன்னிப்புக் கேட்டு இனி இதைப் பற்றி வாய்திறாவதீர்கள் கூறினால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அதேபோலிருக்கிறது உங்கள் வாதம். - நித்திரையெழுப்பி
மன்னிப்புக் கேட்டுவிடுவதனால் செய்த தவறு சரியென்றாகிவிடாது என்பது உண்மைதான்.
பின்னூட்டமிட்ட நித்திரையெழுப்பி, வன்னியன், ராம், மற்றும் "anonymous" ஆகியோருக்கு என் நன்றி உரித்தாகட்டும்.
Post a Comment
<< Home