சின்னதாய் சில வரிகள்
சோகத்தை மனசுக்குள் புதைக்கின்றேன்.
அது இடமில்லாமல்
கண்களால் கசிகின்றது.
அடுத்த பிறப்பிலாவது
சேர்வோம் என்றவளே,
போன பிறப்பிலும்
இதைத்தானே சொல்லியிருப்பாய்.
சனியனே,
சனியனே என்றெவரையும்
ஏசாதே.
பல்லைக் கடித்துக் கொஞ்ச நாள்
கவலையை மறக்க முயல்;
பின்னர்?
பல்லுக் கொட்டுப்பட்டுப் போம்.
2 Comments:
///செல்வரூபன் ரதியக்காவுக்கு ஏதோ கடிதங் கொடுக்க அவா அவரை "நாயே, நீ உதுக்கெல்லாம் நீ ஒருகாலம் அனுபவிப்பாய்" என்று திட்டிச் சாபமிட்டார். அதே ரதியக்காவை அதே செல்வரூபன் கல்யாணங் கட்டி இப்ப நல்லா கஸ்ரப்படுகிறார்.///
:-) :-)
நாய்க்குப் பயந்து அங்கை போடாமல் உங்கள பின்னுட்டத்தை இங்கை போட்டுவிட்டியள் போலை
Post a Comment
<< Home