குழந்தாய்...!
நரகத்திலும்
குழந்தையுண்டாம்.
பாவம் செய்தார்க்கு
நரகமெனின்
குழந்தையும் பாவிதானோ?
குழந்தை அழுகையில்
கூடவே
பெரியாளாய்
பெரிதுமழும் மனசு.
'பாவங் குழந்தை,
என்ன வலியோ
என்ன குறையோ?'
குழந்தையாய் மாற
எனக்கும்
ஆசைதான்!
ஆனாலும்
பிடிக்காத மூஞ்சையெலாம்
செல்லங் கொஞ்சுமென
மனம் நினைக்க
ஆசை கரைந்து போம்.
தயவு செய்து
நீங்கள் யாவரும்
குழந்தையாய் மாறுவீர்.
நீவிர் அப்போ
தீது செய்யினும்
வலியெடுக்காதே...!
எவரேனும்
நிலத்தினில் துப்பினும்
சுள்ளென்று கோபமெழும்.
குழந்தை
முகத்தினில் துப்பினும்
இன்னும் மனமேங்கும்.
எனவே
குழந்தையாய் மாறுவீர்.
குழந்தையெனின்
கெட்டது தவிர்த்து
கேட்டது கிடைக்கும்.
கேளாததுங் கிடைக்கும்.
குழந்தைப் பிள்ளைக்கும்
குட்டி நாய்க்கும்
செல்லம்
கொடுத்தல் தவறென
பெரிய
சொறி நாய்கள் வவ்வும்.
இல்லாதொருவனுக்கு
குழந்தை மனம் சமமென்று
சிலது
அலம்பித் திரியும்.
அப்போ
மனிதர்களெல்லாம்
பெரிய்ய்ய்ய கடவுளெல்லோ...!
நஞ்சில்லாப் பாம்புகளும்
நல்மனத்து
வஞ்சிகளும், ஆடவரும்
பிஞ்சுக் குழந்தைகள்தான்;
யாவரும்
குழந்தையாய் இருந்தவர்தாம்.
2 Comments:
குழந்தையாய் இருந்துவிட
எல்லோருக்கும் ஆசைதான்.
வளர்ந்தவர்கள் குழ்ந்தை மன்ம் கொண்டோராய் இருந்துவிட்டால்
அவருக்கே மிகக் கஷ்டம்.
இதுதான் யதார்த்தம்.
மனசும் வயசும் பொருந்தாவிட்டால் கஸ்ரம்.
Post a Comment
<< Home