நான் + நீ =?
நான் + நீ =?
நாலு நாளாய் நான் முயன்றும்
நல்ல பதில் கிடைக்கவில்லை.
நல்லதம்பி வாத்தியாரும்
இல்லைக் கணிதஞ் சொல்ல.
சயன்ஸ் படிக்கிற தம்பியும்
நயண்டையாய்ச் சிரிக்கின்றான்.
அண்டை வீட்டுப் பெட்டையிடம்
ஒண்டியாய் போய்க் கேட்கட்டாம்.
வண்டி வண்டியாய் ஆவலுடன்
நான் + நீ =? என வினவ
நாசமாய்ப் போவாய் என்று -அந்த
பேயே சொன்னதையோ!
நான் வணங்கும் முருகனிடம்
நான் + நீ =? என்றேன் -அவனோ
வள்ளி, தெய்வானை நோக்கி
நான் + நீர் =? என்றான்.
வள்ளி நிலம் பார்க்க,
தெய்வானை எனை முறைக்க
ஐயோ தெய்வக் குற்றமெல்லோ!
பக்கத்துவீட்டுப் பாட்டியிடம்
பாக்குச் சில கொடுத்து
நான் + நீ யாதென்றேன்.
பாட்டி முகஞ் சிவந்து
தாத்தாவின் முகம் பார்க்க
தாத்தா பதில் சொன்னார்.
தான் + பாட்டி என்றால்
நான்கு பெடியங்களும்,
மூன்று பெட்டையளும்,
இன்னுங்கொஞ்ச மோகமுமாம்.
என்ரை கடவுளே
என்ரை கடவுளே...
நான் + நீ என்றால்
இதுதானோ மெய்யர்த்தம்?
நாசமாய்ப் போற தம்பி
நில்லடா உனக்கிருக்கு!
9 Comments:
வணக்கம்,, நான் + நி என்றாள் நாங்கள் என்று தான் படித்த ஞபகம், இப்ப எல்லம் தப்பு தப்பா தெரியுது...
:-)
எழுதிய ஆண்டையும் போடலாம் இல்லையா?!
இது என்ன,
Hum Thum -என்ற ஹிந்தியின் தமிழாக்க வினாவா?
Hum Aapke Hein Koun? என்றும் கேட்கலாம் போலிருக்கு !
nalla irukku kiso
nalla irukku kiso
எதுக்கும் கண்ணாடிக்கு முன்னால நிண்டு கேட்டுப்பாரும்.
அருமையாக எழுதுகிறீங்கள் கிஸோக்கண்ணன்.
இவ்வளவு நாளும் என் பார்வைக்குள் சிக்காது எங்கே இருந்தீங்கள்?
நல்ல கவிதை வளம் உங்களிடம் இருக்கிறது. தொடருங்கள்.
காவலன், பார்வையில் தப்பா? தெரிவதே தப்பா?
எழுதிய ஆண்டு மறந்து போச்சு பிரதீபா. ஆகக் குறைஞ்சது மூன்று வருசம் இருக்கும் எண்டு நினைக்கிறன்.
சந்திரவதனா, நான் இங்கு தமிழ்மணத்தில்தான் இருந்தேன்.
இல்லை ஞானபீடம். அந்தப் படம் வர முதலேயே எழுதியிருந்தேன். நல்ல கலகலப்பான படம் அல்லவா அது.
பின்னுட்டமிட்ட காவலன், முத்து, பிரதீபா, சத்தி, ஞானபீடம், மூர்த்தி, மதி, வசந்தன், சந்திரவதனா யாவருக்கும் நன்றி.
Post a Comment
<< Home