Monday, June 06, 2005

நான்...?

எனக்கு சின்னனிலை இருந்தொராசை. எப்படியாவது ஒரு சினிமா நட்சத்திரமா வரவேண்டுமென்று. அது நடவாது என்று திண்ணமாகத் தெரிந்த போது நம்பிக்கை நட்சத்திரமாக என்றாலும் வரவேண்டுமென்று கொஞ்ச நாள் முயன்று பார்த்தேன். கடைசியாய் அதுவும் போய், ஒருவாறு தமிழ்மணத்தின் இவ்வார நட்சத்திரமாக வந்திருக்கின்றேன். பராக்! பராக்!

இப்ப நான் என்னைப் பற்றிச் சற்றுச் சொல்லியாக வேண்டும். நான் எப்போது பிறந்தேன் என்பதிலிருந்து ஆரம்பிக்கவா?

நான் பிறக்கேக்கை சரியான சின்னக் குழந்தை. அதனாலை எப்ப பிறந்தநான் எண்டதை சரியா ஞாபகம் வைச்சிருக்க முடியாமல் போச்சு. அதை தெரிஞ்சு வைச்சு நீங்களும் என்னதான் செய்யப் போறீங்கள்!

நான் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கரவெட்டியென்னும் ஊரிலை 1995ஆம் ஆண்டுவரை வாழ்ந்து, 1995 சித்திரை மாசத்திலை கனடாவுக்குக் குடிபெயர்ந்தேன். எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலையிருந்து படிச்சுக் கொண்டிருக்கிறன்.

தற்போது University of Western Ontarioவில் புள்ளிவிபரவியல் துறையிலை பட்டப்படிப்பைத் தொடர்கின்றேன். காட்டுத்தீயை இலாபகரமாக* அணைப்பது எப்படி என்பது சம்பந்தமாகவே எனது ஆராய்ச்சி.

இலக்கிய உலகில் இளைத்த என் பாதங்களை எப்போது பதித்தேன் என்பதனை இளகிய மனம் படைச்ச உங்களுக்குச் சொல்கின்றேன்...யாவரும் கேளுங்கள்.

ஈழத்தில் கலைபண்பாட்டுக் கழகமானது மாணவர்களிற்கு இடையில் வருடாந்தம் கவிதைப் போட்டியொன்றினை ஒழுங்கு செய்யும். எமது தமிழாசிரியர் கேட்டார் யாருக்கு கவிதைப் போட்டியில் பங்குபற்ற விருப்பமென்று. பக்கத்திலை இருந்தவன் "கிஸோ தன்ரை பெயரைப் போடட்டாம்" என்று பகிடியாகச் சொல்ல அதுவே வெற்றியாகி போனது (யாருக்கு?). அந்தக் கவிதைப் போட்டியில் மூன்றாம் இடத்தை (1994?) பெற்றேன்.

முதல் கவிதைக்கே மூன்றாம் பரிசு கிடைச்சால், மூன்றாம் கவிதைக்கு எத்தனையாவது பரிசு கிடைக்கும் என்று கணக்குப் பார்த்தேன். இப்படியாக ஆஆஆஆ ரம்பமானது எனது எழுத்துலக வாழ்க்கை.

இந்தப் படம் மக்மாஸ்ரர் பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்ற நிகழ்வொன்றில் - 2 வருடங்களுக்கு முந்தி - ஒரு சிறுஉரையினை வழங்கியபோது எடுக்கப்பட்டது. அந்த உரையில் நான் இறுதியாய்ச் சொன்னது:

மிச்சம் ஏதுமின்றி -எம்
இருப்புகள் போனாலும்
கொச்சை மொழியொன்றாய் -தமிழ்
உருக்குலைந்து போகாது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

19 Comments:

At 11:40 AM, June 06, 2005, Blogger கறுப்பி said...

வாருங்கள் நட்சத்திரம் அவர்களே. நம்பிக்கையைக் கைவிட்டு விடாதீர்கள். தங்களுக்கு நடிப்பில் ஆர்வம் இருப்பதைத் தற்போதுதான் தெரிந்த கொண்டேன். கவலையை விடுங்கள் இனிமேல் என்றுடைய படங்களுக்கெல்லாம் தாங்கள் தான் ஹீரோ(ஜீரோ) ஒரு ரஜனி அளவிற்குக் கொண்டு வந்து விட்டுவிடமாட்டேனாக்கும்.

அதுசரி தங்கள் மூன்றாவது கவிதை என்னவாயிற்று?

 
At 11:52 AM, June 06, 2005, Blogger இளங்கோ-டிசே said...

இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் :-). நிரம்ப எழுதுங்கள் கிஸோ.
// எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலையிருந்து படிச்சுக் கொண்டிருக்கிறன்.//
நானும் இப்படித்தான் நினைவு தெரிந்த நாளிலிருந்து பெண்களை இரசித்துக்கொண்டிருக்கின்றேன். இந்த இரண்டுக்கும் முடிவோ, நலல விளைவோ வராது போல(அவுஸ்திரேலியா 'வசந்த' குமரா வாளை உருவிவிடாதே :-))

 
At 1:14 PM, June 06, 2005, Anonymous Anonymous said...

ஒரு வளியா நட்சத்திரத்திரம் ஆகியாச்சு, இனி என்ன, மோகினி பிசாசும் தேவதை போல தெரியும்,

பழயவற்ரை கிழறாமல், புதிதாய் எழுதவும்,

இரண்டு முன்று வருடங்களுக்கு முன்பு எழுதிய காதல் கவிதைகளை புதுமை படுத்தவும்

கடவுள், கோவில், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான உங்கள் விமர்சநத்தை தொடரவும்

சமுதாய சீர்கேடுகளை அலசவும்...

உங்கள் நெடுநாள் வாசகன்,
காவலன்

 
At 1:55 PM, June 06, 2005, Blogger deep said...

Welcome!

 
At 5:22 AM, June 07, 2005, Blogger வசந்தன்(Vasanthan) said...

ஓய்! இண்டைக்குத் தான் பாத்தன். நீர்தான் நட்சத்திமாம். வாழ்த்துக்கள்.
கனக்க எதிர்பார்க்கிறன். ஆராய்ச்சியள் எப்பிடிப் போகுது?

//அவுஸ்திரேலியா 'வசந்த' குமரா வாளை உருவிவிடாதே :-))//

அதாரடாப்பா எனக்குப் போட்டியா?
இருந்தாலும் டி.சே, உமக்கு நல்லா முத்தித்தான் போச்சு.

 
At 9:37 PM, June 07, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

ஐயையோ, நான் சும்ம பகிடிக்குச் சொன்னன். நான் நானாகவே இருக்கத்தான் எனக்கு விருப்பம். டிஜே, எழுதுறன்... எழுதிக்கொண்டிருக்கிறன்.

//பழயவற்ரை கிழறாமல், புதிதாய் எழுதவும்\\
நெத்தியடி காவலன். முயற்சி செய்யுறன். நெடுநாள் வாசகன் எண்டு சொல்லுறியள், அப்ப கனடாவிலை பத்திரிகை எல்லாம் படிப்பீர்களோ?

ஆராய்ச்சியெல்லாம் ஆச்சி போற வேகத்திலை போகுது வசந்தன். இப்பதானே தொடங்கின்னான்... எனவே நிறைய எதிர்பார்ப்புகள் இல்லை.

நன்றி பிரதீபா.

 
At 2:44 PM, June 10, 2005, Blogger லதா said...

//எனக்கு சின்னனிலை இருந்தொராசை. எப்படியாவது ஒரு சினிமா நட்சத்திரமா வரவேண்டுமென்று. //

தலீவா, நாங்க இருக்கோம் எதுக்கும் கவலப்படாதே :-))

அகில உலகத்(!) தமிழ்மண கிஸோக் கண்ணன் இரசிகர் மன்றச் செயலாளர்

 
At 3:09 PM, June 10, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

ஐயையோ, நான் இந்த விளையாட்டுக்கு வரேல்லை.

\\அகில உலகத்(!) தமிழ்மண கிஸோக் கண்ணன் இரசிகர் மன்றச் செயலாளர்//
இதுவும் நல்லாத்தான் இருக்கு.

 
At 11:09 AM, June 12, 2005, Blogger சினேகிதி said...

Kisonna,
netru neenga "Manavar Ezuchi naal" ku vanthaningalo?Ippathan ungada photo parathen....

Snegethy

 
At 4:34 PM, June 12, 2005, Blogger இளங்கோ-டிசே said...

கிஸோ, இனி உம்மளோட திரியிறது பெரிய கஷ்டம் போல. அதுதான் திருப்பச் திருப்பச் சொன்னனான், உந்த நட்சத்திர, நடிக ஆசைகளையெல்லாம் பதிவில் போடாதையும் என்டு. பார்த்தீரா உம்மட நிலையை. இது கூடப்பரவாயில்லை. மாணவர் எழுச்சி நாளில் இடையில் நாங்கள் எழும்பிப்போய் போன இடத்தையோ, கதைத்த கதைகளோ (பிறகு திரும்பிவந்தோம் எண்டாலும்) யாராவது இங்கே வலைப்பதிவுகளில் எழுதினால் எங்கடை மானம் என்னவாவது? (ஆகக்குறைந்தது என்ரை மானம்?). உனக்கென்டு ஏதும் 'மானம்' இருக்கா என்டு எனது 'பிரிய எதிர்கள்' சிலர் மனதுக்குள் கேட்பதும் புரிகின்றது :-).

 
At 8:03 PM, June 12, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

ஸ்நேகிதி, எங்கை பார்த்தீங்க என் படம்?

டீசே, நீரே எல்லாத்தையும் காட்டிக் கொடுப்பீர் போலை கிடக்கு. இனி மற்றவர்கள் சொல்ல என்ன இருக்குது?

இந்த இருக்கை "இயற்கையை" இரசிக்க வசதியில்லாமல் இருக்கு என்று நீங்கள் தேநீர்ச்சாலையில் சொன்னதையும் எவரும் இங்கு வலைப்பதிவில் போட்டு விடுவார்களோ என்று எனக்குப் பயமாக இருக்கு.

உந்த சினிமா நட்சத்திரமாகும் ஆசையை உண்மை என்றோ நம்பிறீர். சும்மா விளையாட்டுக்கு எழுதினேன்...அது வினையாகும் என்று யாரறிவார்.

 
At 11:51 AM, June 13, 2005, Blogger சினேகிதி said...

haha,
kavaleye pada vendam nan neenga kathachathai pathi elluthave maten.Ungada padam ungada pathivillathan parthanan.

Snegethy

 
At 12:34 PM, June 13, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

நல்லது, இதற்காக டீசே காலம்பூரா நன்றிக்கடனுடன் இருப்பாராக.

 
At 1:26 PM, June 15, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

ஸ்நேகிதி, இங்கு சென்று தமிழில் தட்டச்சுச் செய்து அதனைப் பின்னூட்டமாக இடுங்கள்.

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

 
At 5:11 PM, June 16, 2005, Blogger சினேகிதி said...

கிஸோண்ணா இனிமேல் தமிழில் பின்னூட்டமிடுகிறேன்.ஓ… உங்கட பேரில் வடமொழி எழுத்து இருக்கு. $20 கொடுத்து பேரை மாத்திடுங்கோ:)

சினேகிதி

 
At 5:19 PM, June 16, 2005, Blogger ஜெயச்சந்திரன் said...

நட்சத்திரம் மின்னி முடிஞ்ச பிறகு தான் கண்டனாக்கும்.
சீதண பதிவும் பாத்தன். நல்லாயிருக்கு.

 
At 5:28 PM, June 16, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

ஸ்நேகிதி,
எங்கே ஆளைக் காணோமென்று இப்பதான் நினைச்சன் (பொய்ய்ய்ய்ய்ய்ய்).
ஆரம்பித்திலேயே எனக்கு இப்ப உள்ள தமிழுணர்வு இருந்திருந்தால் மாற்றியிருக்கலாம். ஆனா இப்ப கொஞ்சம் கடினமா இருக்கு. என்னைப் பொறுத்தவரை கிசோ என்பதும் கிஸோ என்பதும் வெவ்வேறான பெயர்கள். கிட்டத்தட்ட 20 வருடமா (சரி சரி...விளங்குது) கூட இருந்த ஒன்றை மாற்றுவது சும்மா இலேசுப்பட்ட காரியம் இல்லை.

வாங்கோ குமிழ். இப்பவாவது வந்தீங்களே, அதே பெரிய விசயம்.

 
At 6:17 PM, June 16, 2005, Blogger ஜெயச்சந்திரன் said...

//அதே பெரிய விசயம்.//
என்ன கடிக்கிறீங்களா.

 
At 6:20 PM, June 16, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

சீச்சீ.

 

Post a Comment

<< Home

statistics