பட்டம் பறக்குது
வா
இளைய கவிஞனே வா!
உன் கவியை நான் புகழ்வேன்
என் கவியை நீ புகழ்.
என்னநான் கவியெழுதவில்லையா?
காரியமில்லை;
பேரறிஞன் பட்டமாவது தா.
.
இந்தியாவிலிருந்து
இந்தியாவிலிருந்து
வந்தால் எவரும்
காலில் விழு;
மாலை போடு.
என்ன அது எஸ்.எஸ். சந்திரனா?
எவரெனில் உனக்கென்ன?
பெயர்தானே உன்னிலக்கு.
.
யாரங்கே என் புகழ்பாடி
கவிதை யாப்பது?
ஓ நீயா?
நான் விபுலானந்தராம்;
நீயென் சீடனாம்.
சொல்லு...
உனக்கு யாது வேண்டும்?
மன்னி,
குட்டி நாய்க்கெல்லாம்
பட்டந் தரமுடியாது...
கூட்டிவா வளர்ந்த பின்பு.
.
புகழ் வேணுமா?
அதுக்கேன் நாணம்.
நீ கவிஞன்;
நிமிர்ந்து நில்.
கடைத் தேங்காய் எடு;
வழிப் பிள்ளையாருக்கு அடி.
அரச மானியம் பெறு;
ஆரிடமும் ஆக்கங் கேள்.
மாசாமாசம் மலர் அடி.
வருசாவருசம் போட்டி வை;
பெரியப்பாவின் பெருசுக்கோ
மனிசியின்ரை மாமாக்கோ
பரிசு கொடு.
.
வீட்டிலை நீ
சும்மாதானே நிக்கிறாய்?
வா, சங்கம் தொடங்குவம்.
இந்த முறை நான் தலைவர்
நீ உறுப்பினன்;
வாற வருசம் நீ தலைவர்.
ஒற்றுமையே எமது பலம்.
உண்டியிலை உப்புத் தவிர்
மானம் ரோசம்
உனைக் கேளாமலே சேர்ந்திடும்.
மானமா புகழா?
இன்றே முடிவு செய்.
காலம் பொன்னானது
காலம் புகழானது.
.
தொலைபேசி உனக்கும்
இலவசம்தானே,
வருசம் தவறாமல்
வானொலிக்காரருக்கு -புது
வருச வாழ்த்துச் சொல்லு.
வண்டியும் ஒருநாள்
படகினில் ஏறும்;
படகும் ஒருநாள்
வண்டியில் ஏறும்.
யாரேனும் ஒருவரை
கையுக்கை வைச்சிரு.
.
செய்ந்நன்றி
கொன்றார்க்கு உய்வில்லை.
உனக்கு நான் சொறிந்தேன் -இனி
எனக்கு நீ சொறி.
6 Comments:
//அரச மானியம் பெறு;
ஆரிடமும் ஆக்கங் கேள்.
மாசாமாசம் மலர் அடி.
வருசாவருசம் போட்டி வை;
பெரியப்பாவின் பெருசுக்கோ
மனிசியின்ரை மாமாக்கோ
பரிசு கொடு.
.
வீட்டிலை நீ
சும்மாதானே நிக்கிறாய்?
வா, சங்கம் தொடங்குவம்.
இந்த முறை நான் தலைவர்
நீ உறுப்பினன்;
வாற வருசம் நீ தலைவர்.
ஒற்றுமையே எமது பலம்.//
:-)))
//உனக்கு நான் சொறிந்தேன் -இனி
எனக்கு நீ சொறி.\\
சொறி (*_*)
hi kiso kavithai rombavea nalla erukkuthu
//இந்தியாவிலிருந்து
வந்தால் எவரும்
காலில் விழு;
மாலை போடு.
என்ன அது எஸ்.எஸ். சந்திரனா?
எவரெனில் உனக்கென்ன?
பெயர்தானே உன்னிலக்கு.//
இந்தச் சம்பவம் நான் கேள்விப்படேலயே?
கலக்கிட்டே கண்ணா,
அறிப்புள்ள வரை
சொறி நிற்க்காது
சொறிதல் உலக இயல்பு;
சங்கம் வைப்பதும்
சன்னிதி செய்து
நிதி வசூலிப்பதும்
புலிக்குப் போனது
என கொடி பிடிப்பதும்;
கடல் கடந்த
தமிழ் மக்கள்
இந்திய எண்ணையும்
இலங்கைத் தண்ணியுமாக
சேர்ந்தே வாழ்வது
எம்பெருமான்
முருகன் அருள்தான்.
சுரேஷ்
கறுப்பி, டிசே, சிரிப்பே சீவியம்.
சத்தி, உங்களுக்கு ஒரு பக்கமும் இல்லையா? நீங்களும் ஒரு வலைப்பதிவை ஆரம் பிக்கலாமே!
சுரேஷ், வருக வருக; அடிக்கடி உங்கள் கருத்துக்களைத் தருக.
வசந்தன், எனக்கு தற்பெருமை பிடிக்காது. எண்டாலும் நீங்கள் கேட்பதாலை சொல்லுறன். நாங்கள் இங்கை கனடாவிலை கலைக்கு அதிக மதிப்புக் கொடுப்பம். கலையுலகம் சம்பந்தப்பட்ட எவரும் வந்தால் அவரைக் கனம் செய்யக் காலிலை விழுவம் (முந்தியொருக்கா நடிகர் வினுச்சக்கரவர்த்தியின்ரை பாதகமலங்களில் விழ, அந்த ஆளுக்கு heart attackகே வந்திட்டுது). கவிப்பேரரசு வைரமுத்து வந்தால் சங்கிலி போடுவம் (அதாலை எங்கடை நகைக்கடைகளுக்கும் ஒரு தனிவிளம்பரம்தானே). அவருக்கும் இலாபம்; எமக்கும் இலாபம். இதிலை உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையென்று நினைக்கிறன்.
பிந்திக் கிடைச்ச தகவல்கள் மூலம், எம் வணிகப்பெருமாக்கள் நடிக சீகாமணி சிறீகாந் அவர்களை இந்தக் கோடைகாலம் அழைப்பதாகக் கேள்விப்பட்டேன்.
Post a Comment
<< Home