Thursday, January 20, 2005

யார் வந்து நிறுத்த

...பிறகு எனது பொருட்களும், அவனது பொருட்களுங் களவு போயின. அவையாவன:

1. கணனி
2. CD player
3. shirts
4. சுவிங்கம்
5. உண்டியல்
6. பாதணிகள்

பக்கத்து வீட்டுக்காரர்கள் வேற்றினத்தவர்கள். அவர்கள் சொன்னார்கள், எங்கடை பெடியள்தான் கொஞ்சப்பேர் குப்பைபோடும் பைகளில் கட்டி என்னவோ எல்லாம் மத்தியானம் போலை கொண்டு போனாங்களாம்.

என் உடமைகள் களவு போன கவலை போய், என் தமிழ்ச் சோதரர்கள் பணத்திற்காய் மானங்கெட்டு சோரம் போன கவலையே என்னை வாட்டியது மிகவுங் கொடிதாய்.

வெறும் ஒரு டொலர் பெறுமதியான சுவிங்கத்தினைக்கூட அவர்கள் அற்பராய்க் களவாடியது எம்மினத்தைத்துரத்தும் கேவலங்களில் ஒன்றன்றிப் பிறிதென்ன!

காப்புறுதி வருமென்றார்கள். என் நண்பனுக்குக் கொஞ்சங் கிடைத்தது. எனக்கு அதுவுமில்லை. அது பற்றிய கவலையும் எனக்கில்லை. என் கவலையெல்லாம்....

லண்டனிலையிருந்து தெரிந்தவர் ஒருவர் தங்கடை நகைகள் களவு போய்விட்டதாகச் சொன்னார். முதன்நாள் ஒரு கல்யாணத்திற்குப் போனவையாம்.

நாம் எதனை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம்?

இளைய சமுதாயத்தில் பாதிப் பேர் எமது தாயகத் துயர் நீக்கத் தம்மால் முடிந்தவரை உழைச்சுக் கொண்டிருக்க, கொஞ்சப் பே(ய)ர் தனிமனித அற்ப சந்தோசங்களுக்காக களவாடுவதை, தவறான பாதைகளில் செல்வதினை யார் வந்து நிறுத்த...?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

At 2:23 PM, May 04, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

பழைய பின்னூட்டங்கள்:

..............

//வெறும் ஒரு டொலர் பெறுமதியான சுவிங்கத்தினைக்கூட அவர்கள் அற்பராய்க் களவாடியது எம்மினத்தைத்துரத்தும் கேவலங்களில் ஒன்றன்றிப் பிறிதென்ன!//

அதுக்குள்ள ஆரேனும் சுவிங்கப் பிரியன் இருந்திருப்பான். மற்றது கட்டாயம் தூக்கிக் கொண்டு போகவேணுமெண்டதில்ல. உங்கட வீட்டயே மெண்டு துப்பிப் போட்டும் போயிருப்பாங்கள்.
வசந்தன் | Homepage | 03.13.05 - 7:51 am | #

-----------------------------------

எப்படிக் கண்டு பிடிச்சீங்கள் வசந்தன்? எனக்கு இப்ப ஒரே சந்தேகமா இருக்கு. 1998 இல் கனடா வந்தீங்களா? பரவாயில்லை சொல்லுங்க, நான் கோபப்படமாட்டன்.
கிஸோக்கண்ண | Homepage | 04.03.05 - 1:08 pm | #

 

Post a Comment

<< Home

statistics