Wednesday, December 08, 2004

அகராதி

கனவு: சென்ஸாருக்குப் போகாத, செலவே இல்லாத ஒரு குறும்படம்.

புண்ணியம்: நாளைய சொர்க்கத்திற்கு இன்றைய இலஞ்சம்.

காதல்: ஒருவகைக் களவு; என்று பிடிபடுவோம் என்ற பயம் என்றைக்குமே
இருக்கும்.

மனசு: ஞாபகங்களைப் போட்டு வைக்கும் ஒருவகைப் பெட்டி.

கண்: காதல் பிறக்கும் இடம்; கண்ணீரின் சொந்த இடம்.

புதுக்கவிதை: ஒருவகைப் புயல்; ஆனால் அழிவு இருக்காது.

மரபுக் கவிதை: ஒருவகைத் தென்றல்; ஆனால் ஒரு அறுப்பும் விளங்காது.

சொர்க்கம்: இல்லாத ஒன்று; நாம் இறக்கின்ற போதே இருக்கும் என்பர்.

நண்பன்/நண்பி: நாம் புழுகுவதையெல்லாம் நம்புகின்ற அல்லது நம்புமாற்
போல் நடிக்கும் ஒரு ஜீவன்.

வாழ்க்கை: நாளைய இறப்பிற்கு எம்மைத் தயாராக்குவது.

காசு: கடதாசியினால் உருவாக்கப்பட்ட ஒன்று....மஹாராணி சிரிச்சுக்
கொண்டிருப்பாங்கோ!

கணிதம்: நீங்கள் பாஸாகாத ஒரே ஒரு பாடம் அல்லது அதிக தடவை
கோட்டைவிட்ட பாடம்.

உணவு: நீங்கள் உயிர் வாழ்வதற்கான காரணம்.

கடவுள்: பரீட்சைக்கு முதல் மீதமுள்ள ஒரேயொரு நம்பிக்கை; மனிதனின்
மிகப் புத்திசாலித்தனமானகண்டுபிடிப்பு; அஞ்சு சதத்துக்கும்
பிரயோசனம் இல்லாதது.

மனிதன்: வாலில்லாத ஒருவகை குரங்கினம்.

குரங்கு: வாலுள்ள ஒரு மனிதம்.

கண்ணாடி: தளவாடி; நீங்கள் எவ்வளவு அசிங்கம் என்பதற்கான ஒரேயொரு சாட்சி.

காமம்: (பார்க்க உணவு)

அண்ணா: இடைக்கிடை பணம் அனுப்பும் ஒருவகை மனித ஜீவன்.

தமிழ்: உங்களை நினைத்து நீங்களே பெருமைப்படும் ஒருவிடயம்.

கண்ணீர்: overflow of sadness that escapes through your eyes.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

At 12:45 PM, June 13, 2005, Blogger சினேகிதி said...

This comment has been removed by a blog administrator.

 
At 5:19 PM, June 15, 2005, Blogger கிஸோக்கண்ணன் said...

எவருக்கும் பொருந்த வேண்டிய கட்டாயமில்லை.

 

Post a Comment

<< Home

statistics