முதற் பூவே...
நாடுகள் கண்டு பிடிக்க
நாடி,
எவர்க்குமே தெரியாமல்
மாண்ட முதற் கடலோடியே...
தமிழின் மூத்த சொல்லை
யாத்த தமிழனே...
காதலென்றெ தெரியாமல்
முதன் முதலாய்
காதலித்த காதலரே...
அடக்கப்பட்ட இனத்திற்காய்
குரல் கொடுத்து
அடையாளம் தெரியாச்
சடலமாய்ப் போன
முதற் போராளியே...
குரல் கொடுக்க
உரமே இல்லாமல்
அடையாம் தெரியாச்
சடலமாய்ப் போன
அடக்கப்பட்ட இனத்தின்
முதல் மனிதமே...
உரிமைகள்
பறி போனதே தெரியாமல்
முதலில் மரித்துப்போன
அப்பாவி மனிதமே...
அந்நிய நாடொன்றில்
முதற் கடை
தொடங்கிய தமிழனே
கடை தொடங்கி
முதலுமிழந்த
முதல் தமிழனே
கவிஞன் என்று
அவையால்
அடையாளம் புரியாமல்
அடங்கிப் போன
முதற் கவியே...
கவிஞன் என்று
தனக்கே தெரியாமல்
சயனித்த முதற்கவியே...
யாருமே பார்க்காமல்
தோன்றி மறைந்த
பிரபஞ்சத்தின்
முதலாவது வானவில்லே...
பாலுக்காயழுத
தாயிழந்த முதற் சேயே
சேயிற்காயழுத
சேயிழந்த
முதல் தாயே...
வாழப் பிடிக்காமல் -முதலில்
தற்கொலை செய்த
அப்பாவி ஜீவனே...
நட்டநடுக் காட்டினிலே
வாடிப் போன முதற்பூவாய்
கேட்கப்படாமற் போன என்
முதற் கவிதை
உமக்குச் சமர்ப்பணம்.
-கிஸோக்கண்ணன்
0 Comments:
Post a Comment
<< Home