வேதனையான நகைச்சுவைகள் + தகவல்கள்
சார்லி சாப்ளின் மாதிரி நடித்துக் காட்டும் போட்டியில் சார்லி சாப்ளினுக்கு மூன்றாவது பரிசு கிடைத்ததாம்.
யதார்த்தமான கிராமத்தான் பாத்திரத்தில் நடிக்க ஒருவர் தேவையென்று இயக்குநர் பாரதிராஜா கிராமம் கிராமமாய் அலைந்தாரம்.
கோவிலுக்குப் போய் என் அக்கா கடவுளை வணங்கினார்.
எல்லோரும் ஆசைகளைத் துறக்க வேண்டுமென்று புத்தர் ஆசைப்பட்டாராம்.
இதனை வாசிக்கும் நீங்கள் ஒரு அறிவாளி
11 Comments:
நல்லாத்தானே இருந்தனீர்?
நேற்றுத்தான் பரீட்சைகள் முடிந்தன. அந்தச் சந்தோசத்திலை கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுப் பதிஞ்சு போட்டன்.
அதுசரி வசந்தன், வீட்டுவேலை எல்லாம் செய்துபோட்டீங்களா?
வசந்தன், எனக்கும் அதே கேள்விதான்! பரீட்சை சமயமென்பதால் கூடப்படித்தோ அல்லது யாரிடையதோ வினாத்தாள்களைத் திருத்தியோ இந்த நிலைமை சிலவேளைகளில் வந்திருக்கக்கூடும் :-) அதுசரி, ரொரண்டாவிற்கு எப்போது வருவதாய் உத்தேசம், கிஸோ?
Oops! Kiso while you were posting ur comment, I posted mine too.
வாங்க டிசே சாரு. ம்ம்ம்...உங்க கல்யாணத்துக்கு வரலாம் என்றிருந்தேன், ஆனா நீங்கதான் உப்பிடிச் செய்து போட்டிங்களே!
எந்த சனி ஞாயிறும் அடுத்த நான்கு மாசாங்களில் வர முடியும். உங்களுக்கொரு மின்னஞ்சல் செய்தேன் கிடைச் சுதா?
கலக்கிட்டீங்கள். நாலு விக்கரமாதித்தன் கவிதை மெலாஞ்சே செய்து படித்தாற் போல இருந்தது.
கிஸோ சிந்திக்கச் சில துளிகளா?
இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது சார்ளிச் சப்பிளினுக்கு ஒருவரையும் கொப்பியடிக்கத் தெரியாது.
கிராமத்தாக்கள் எல்லாம் முன்னேறீட்டீனம். சினிமா கினிமா எண்டு அலைய அவர்களுக்கு விருப்பமில்லை.
உங்கட அக்கா கோயிலுக்குப் போவது டா வடிக்க
பாவம் புத்தர் அவரும் மனுசன்தானே
வசந்தன்(உம்) வீட்டு வேலை கூடச் செய்வார்
சரியா?
நன்றி ரோசாவசந்த்...அடிக்கடி வாங்க (நான் அடிக்கடி எழுதுதும்போது). மெலாஞ்சே என்றால் என்னவென்று அடுத்த முறைவரும்போது சொல்லுங்கள்.
கறுப்பி, பாரதிராஜா உங்களைவிடப் பரவாயில்லைப் போலுள்ளது. சார்லி சாப்ளினுக்கு ஓரளவுக்காவது கொப்பி அடிக்கத் தெரிந்திருக்கணும். இல்லாதுவிடின் மிகச் சிறந்த நடிகராக இருத்தல் சாத்தியம் இல்லை. அவர் ஓகே, ஆனால் நடுவர்களிடம்தான் கொஞ்சம் பிரச்சினை. உண்மையில் அது நடிக்கும் போட்டியல்ல; மாறுவேடப்போட்டி. நான் தான் சொதப்பிவிட்டேன்.
கிராமத்தவர்கள் நடிக்க முன்வரவில்லை என்பதல்ல இங்கு தகவல். மிகைப்படுத்தப்பட்ட ஒரு கிராமத்தான் பாத்திரத்தைத்தான் பாரதிராஜா தேடினார்...யதார்த்தமான கிராமத்தானையல்ல.
...உங்கட அக்கா கோயிலுக்குப் போவது டா வடிக்க...
பெண்ணின் மனசு பெண்ணுக்குத்தான் புரியும் என்பது இங்காவது உண்மையாக இருக்கின்றது.
வசந்தன்...? பாவம், அவரை விட்டுவிடுவோம். கறுப்பி,
//கலக்கிட்டீங்கள். நாலு விக்கரமாதித்தன் கவிதை மெலாஞ்சே செய்து படித்தாற் போல இருந்தது.//
ரோசா,
பிரெஞ்சில் படிக்கும் அண்ணா பையன் அவன் அம்மாவிடம் சொல்லுவான்,
அம்மா சோத்தை நல்லா மெலாஞ்சே செய்யம்மா என்று. அவனை மாதிரிப் பேசுறீங்க?
மெலேஞ்cheயை சந்தர்ப்பம் சுட்டி மதி விளக்கியது நன்று. அதே நேரம் நான் அவரின் அண்ணா பையனை போல குழந்தையாய் பேசுவதாய் சொன்னதற்கு மிகவும் நன்றி. (cheஎன்பது ஷே என்பது போல் உச்சரிக்க வேண்டும். நானும், மதியின் அண்ணா பையனும் அதை தமிழ் படுத்தியிருக்கிறோம்.)
Kiso kaNNan,
could you please drop me a line at
mathygrps at yahoo dot com
nandri
Post a Comment
<< Home